உயிரிழப்புகளைத் தடுக்கவே ஊரடங்கு! ஆனால் விதிகளை மீறியதாக காவலர்களால் இருவர் மரணம் – கமல்ஹாசன்

 

உயிரிழப்புகளைத் தடுக்கவே ஊரடங்கு! ஆனால் விதிகளை மீறியதாக காவலர்களால் இருவர் மரணம் – கமல்ஹாசன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

உயிரிழப்புகளைத் தடுக்கவே ஊரடங்கு! ஆனால் விதிகளை மீறியதாக காவலர்களால் இருவர் மரணம் – கமல்ஹாசன்

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை, மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் நேற்றிரவு உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் இன்று காலை பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்” என பதிவிட்டுள்ளார்.