தமிழக அரசை பாராட்டிய கமல்ஹாசன்!

 

தமிழக அரசை பாராட்டிய கமல்ஹாசன்!

கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.3.2 கோடி வழங்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் கோரிக்கை விடுத்திருந்தார். மொழி வளர கைகொடுங்கள் எனவும் அறிக்கை வாயிலாக கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழக அரசு ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.10 கோடி கொடுத்து உதவி செய்தது போன்று கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தேவையான ரூ.3.2 கோடி நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தமிழக அரசை பாராட்டிய கமல்ஹாசன்!

இந்த சூழலில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “டோரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கக் கோரிய எனது அறிக்கைக்கு உடனே செவி சாய்த்து 1 கோடி ரூபாய் நிதிநல்கை அறிவித்த தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வெல்க தமிழ்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.