”முதலாளிகளுக்கான பட்ஜெட்”- கமல்ஹாசன்

 

”முதலாளிகளுக்கான பட்ஜெட்”- கமல்ஹாசன்

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், ஸ்பெஷலான திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கான திட்டத்தை அறிவித்தார். தமிழ்நாட்டில் பல்நோக்கு கடல் பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

”முதலாளிகளுக்கான பட்ஜெட்”- கமல்ஹாசன்

சென்னை மீன்பிடித் துறைமுகம் மேம்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி விலையை பழைய நிலைமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் பட்ஜெட் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.