மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டது பேட்டரி டார்ச் சின்னம்!

 

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டது பேட்டரி டார்ச் சின்னம்!

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டது பேட்டரி டார்ச் சின்னம்!

கமல்ஹாசன் கடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டார். அதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் தனக்கு டார்ச் லைட் கிடைக்கும் என கமல் ஹாசன் நினைத்திருந்த நிலையில், டார்ச் லைட் எம்ஜிஆர் மக்கள்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே திடீரென தங்களுக்கு டார்ச்லைட் சின்னம் வேண்டாம் என எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தது.

இந்நிலையில் தங்களுக்கு மீண்டும் பேட்டரி டார்ச் ஒதுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அதில், “மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதில், 234 தொகுதிகளுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் கிடைத்துள்ளது என கூறும் கமல்ஹாசன், தன் கட்சியினருடன் உற்சாகமாக கரம் ஒலி எழுப்பி கொண்டாடிகிறார்.