பெருந்தொற்றில் போராட்டத்தை மறந்து, உயிரையும் பணயம் வைத்து மக்களை காத்த மருத்துவர்களை கலங்க வைப்பது ஏன்?- கமல்ஹாசன்

 

பெருந்தொற்றில் போராட்டத்தை மறந்து, உயிரையும் பணயம் வைத்து மக்களை காத்த மருத்துவர்களை கலங்க வைப்பது ஏன்?- கமல்ஹாசன்

மற்ற மாநிலங்களில் மருத்துவர்களுக்கு வழங்குவது போல் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்தொற்றில் போராட்டத்தை மறந்து, உயிரையும் பணயம் வைத்து மக்களை காத்த மருத்துவர்களை கலங்க வைப்பது ஏன்?- கமல்ஹாசன்

அவர்களை பணிக்கு திரும்புமாறு கடந்த அக்டோபர் மாத இறுதியில் சுகாதாரத்துறைச் செயலர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ‌‌நீண்ட நாட்களாக போராட்டம் தொடர்ந்து. அதனை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதற்காக மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் கடந்த ஆண்டு இறுதியில் வாக்குறுதி அளித்தார். ஆனால் இந்த நாள் வரை நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “நான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துப் போராடினர் நம் அரசு மருத்துவர்கள். அனைத்துத் தரப்பும் நியாயம் என்று ஒப்புக் கொண்ட போன வருடப் போராட்டம் அது. செயலாளர் பேச்சுவார்த்தை, அமைச்சர் வாக்குறுதி என்று நீண்ட நாடகம், ‘தாயுள்ளத்தோடு முதல்வர் அளித்த உறுதி’ என்னும் க்ளைமாக்ஸோடு முடிந்தது. இடையில் வந்த பெருந்தொற்றில் போராட்டத்தை மறந்து, உயிரையும் பணயம் வைத்து மக்களையும், அரசின் மானத்தையும் காத்தனர் அரசு மருத்துவர்கள். ஒரு வருடம் ஆகியும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கலங்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்?” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.