Home தமிழகம் கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? - கமல்ஹாசன்

கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? – கமல்ஹாசன்

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. இதனிடையே இன்று பிற்பகல் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் ஆளுநரை சந்தித்து விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு தர ஆளுநர் விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவு வெளியீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக, அத்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது அரியலூர், சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். விடைத் தாளில் விடைகள் மாறியுள்ளதாக, விடைகள் மாற்றப்பட்டு பூஜ்ஜியம் என மதிப்பெண்கள் வந்திருப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். விடைத்தாள் அதாவது ஓஎம்ஆர் நகல்கள் பதிவேற்றம் செய்த பின் விடைக்குறிப்பை வைத்து சரிபார்த்ததில் நிறைய மதிப்பெண்கள் கிடைத்ததாகவும், தற்போது அந்த விடைத்தாள் நகல் மாற்றப்பட்டு பதிவெண், கையெழுத்து ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளதாகவும் மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “தேர்விலேயே ஆள் மாறாட்டம், முடிவுகளில் முழுக் குழப்பம். இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு, உள் ஒதுக்கீடும் துறப்பு. கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்

கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து...

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல்நிலையத்திலேயே மரணம்

மதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது...

7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது

சென்னை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை...

டெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும்: சீமான்

விவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம்...
Do NOT follow this link or you will be banned from the site!