வரும் 8 ஆம் தேதி விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்திற்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு

 

வரும் 8 ஆம் தேதி விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்திற்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ போராட்டத்தை பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த வாரம் வியாழக்கிழமையில் இருந்து நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது போராட்டத்தை நடத்தும் விவசாயிகள், மத்திய அரசின் பேச்சுவார்த்தைக்கு இணங்கவில்லை. இரண்டு முறை விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு எட்டவில்லை. அதனால், டெல்லி விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது.

வரும் 8 ஆம் தேதி விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்திற்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு

இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வரும் 8 ஆம் தேதி விவசாயிகள் நாடுமுழுவதும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தமிழக விவசாய அமைப்புகள், எதிர்கட்சிகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், சமூகநல அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களது ஆதரவுகளை தெரிவித்துள்ளன. அந்த வகையில் எட்டாம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அழைப்பின் பேரில் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறோம் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.