பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு கமல்ஹாசன் அவசர ஆலோசனை!

 

பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு கமல்ஹாசன் அவசர ஆலோசனை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், சில கட்சி தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இரண்டாம் கட்ட பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். மூன்றாவது நாளான இன்று கோடம்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு கமல்ஹாசன் அவசர ஆலோசனை!

திடீரென தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் கமல்ஹாசன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.

திமுக- காங்கிரஸ் மத்தியில் ஒரு அசாதாரண சூழல் நிலவி, உறவு முறியும் தருவாயில் உள்ளது. வெள்ளிக்கிழமையன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாக கூட்டத்தில், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, பரபரப்பான சூழல்கொடுக்கும் இடங்களை விட, மரியாதை இன்னும் குறைவாக உள்ளது என அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய தொகுதிகளை திமுக ஒதுக்காததால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் உடன் ஆலோசனை நடத்திவருவது குறிப்பிடதக்கது.