எம்.ஜி.ஆர். வழி செல்லும் கமல்ஹாசன்!

 

எம்.ஜி.ஆர். வழி செல்லும் கமல்ஹாசன்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி, மயிலாப்பூர் , திநகர் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அதிமுக, திமுகவுக்கு டஃப் கொடுத்தது. அதேபோல் கோவை, ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றிருந்தது. சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும், தனது கட்சிக்கு தானே முதல்வர் வேட்பாளர் என்றும் கூறிவந்த கமல்ஹாசன், ஆலந்தூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடவிருப்பதாக கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர். வழி செல்லும் கமல்ஹாசன்!

இந்நிலையில் தமிழகத்திலேயே முதல் கட்சியாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள காவல்துறையிடம் அனுமதி கோரி ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் நாளை மறுநாள் ராமவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார். சட்டமன்ற தேர்தலுக்காக ம.நீ.ம கட்சி சார்பில் 3ம் தேதி மயிலாப்பூர் மாங்கொல்லையில் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளது.