எம்ஜிஆரை தொடர்ந்து காந்தியை சொந்தம் கொண்டாடும் கமல்!

 

எம்ஜிஆரை தொடர்ந்து காந்தியை சொந்தம் கொண்டாடும் கமல்!

ஈஞ்சம்பாக்கம் ஜகஜீவன்ராம் சாலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆய்வு மேற்கொண்டார். அதனை இரண்டாம் கட்ட பரப்புரையாகவும் கமல்ஹாசன் தொடங்கினார். கிழக்கு கடற்கரை சாலையில் ஒட்டியுள்ள ஜெகஜீவன்ராம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கமல்ஹாசனிடம் கோரிக்கை விடுத்தனர். கான்க்ரீட் மழைநீர் வடிகால் அமைப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். மக்களை நேரில் சந்தித்து, மழைநீர் வடிகாலை கமல்ஹாசன் பார்வையிட்டார்.

எம்ஜிஆரை தொடர்ந்து காந்தியை சொந்தம் கொண்டாடும் கமல்!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “குடிமராமத்து பணியை கண்டறிந்து செய்வதையே பெரும் சாதனையாக சொல்கிறார் முதல்வர் ஆனால் ராஜராஜ சோழன் காலத்து ஏரி, நீர் நிலைகளை மீட்டெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. இந்த மழை நீர் வடிக்காலை பார்க்கும் போது ஜெர்மனி தொழில்நுட்பம் தெரியவில்லை. அரசின் ஃபினான்ஸ் மட்டுமே தெரிகிறது. எங்களின் சட்ட பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார். உப்பை சுவாசித்தவரிடம் நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும். கண் மூடி கண் திறப்பதற்குள், எரி மறைந்துவிட்டது

தேர்தல் வந்ததால் எம்ஜிஆரை கொண்டாடுவதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி என்றால் இத்தனை நாட்களாக அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்களது முதல் கோஷமே ‘நாளை நமதே’. எம்ஜிஆர் மக்கள் திலகம். அதனால் யார் வேண்டுமானாலும் அவரின் வாரிசு என்று சொல்வார்கள். காந்தி எனது தாத்தா நல்லத்தை நினைக்கும் எல்லோரும் எம்.ஜி.ஆர்.வாரிசு தான். அதனால் நானும் எம்.ஜி.ஆர் வாரிசு தான். மீண்டும் சொல்கிறேன் எம்.ஜி.ஆரின் நீட்சி நான்” எனக் கூறினார்.