சாதாரண ரூபத்தை விஸ்வருபம் எடுக்க வைக்கிறார்கள்! சின்னம் கிடைக்காத விரக்தியில் கமல் ஆவேசம்

 

சாதாரண ரூபத்தை விஸ்வருபம் எடுக்க வைக்கிறார்கள்! சின்னம் கிடைக்காத விரக்தியில் கமல் ஆவேசம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி விட்டன. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைத்தல், காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ளுதல் என சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது . அதேபோல் அதிமுகவும் தேர்தல் பணிக்கான நிர்வாகிகளை நியமித்து பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளது. கமல்ஹாசனும் நேற்று முதல் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது.

அதில், புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை.

சாதாரண ரூபத்தை விஸ்வருபம் எடுக்க வைக்கிறார்கள்! சின்னம் கிடைக்காத விரக்தியில் கமல் ஆவேசம்

இதுகுறித்து திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “சுதந்திரம், ஜனநாயகம் அன்றாடும் கவனிக்கப்பட வேண்டும். இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்பட்டு இருக்கிறது. அதனால் தான் எங்கள் கட்சிகளில் நிறைய மருத்துவர்கள் உள்ளனர். அரங்கம் எங்கும் தலைகளை பார்க்கவில்லை, தலைவர்களை பார்க்கிறேன். தமிழகத்தில் எங்களுக்கான டார்ஜ் லைட் சின்னம் தேர்தல் ஆணையம் மறுக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் பல மாற்றங்கள் செய்ய காத்து கொண்டு இருக்கிறோம். சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள். நேர்மை தான் எங்கள் யுத்தி. பணத்திற்காக வாக்குகளை விற்காதீர்கள்” என தெரிவித்துள்ளார்.