டாஸ்மாக்கிற்கு அரசு எடுத்துக் கொள்ளும் ஆற்றலை அரசு குடிநீர் விநியோகத்திற்கு செலுத்துவதில்லை- கமல்ஹாசன்

 

டாஸ்மாக்கிற்கு அரசு எடுத்துக் கொள்ளும் ஆற்றலை அரசு குடிநீர் விநியோகத்திற்கு செலுத்துவதில்லை- கமல்ஹாசன்

சென்னை வடபழனியில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக தென்னிந்திய திரைப்பட ஒலிப்பதிவாளர் சங்க தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வழங்குகிறார்.

டாஸ்மாக்கிற்கு அரசு எடுத்துக் கொள்ளும் ஆற்றலை அரசு குடிநீர் விநியோகத்திற்கு செலுத்துவதில்லை- கமல்ஹாசன்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “நகரங்களிலின்றி விவசாயிகள் வாழ முடியும். விவசாயிகள் இன்றி நகரங்கள் வாழ முடியாது. விவசாயத்தை புறக்கணிப்பது போன்ற மடத்தனம் எதுவும் இருக்க முடியாடு

நான் சிறுவயதாக இருக்கும் போதிலிருந்து கேட்டு வருகிறேன். கூவம் நீரை குடிநீராக்குவோம் என கேட்டுவருகிறேன். ஆனால் மத்திய மாநில அரசுகள் புருடா விடுகின்றனர். இப்போது கூவத்தில் எருமை மாடு கூட இறங்காது. ஒரு டாஸ்மாக்கிற்கு அரசு எடுத்துக் கொள்ளும் ஆற்றலை குடிநீர் விநியோகத்திற்கு செலுத்துவதில்லை.

சினிமாட்டோகிராபி ஆக்ட்டில் மாற்றம் கொண்டு வருவதைப் பற்றி செல்வமணி குறிப்பிட்டார். இதனை எமெர்ஜென்சி காலத்திலேயே கொண்டு வரப் பார்த்தார்கள். மோசமான விளைவுகள் இருந்தன. இப்போதும் விளைவுகள் மோசமாக இருக்கும். எங்களை அடிமைப்படுத்த முடியாது என்ற குரல் அன்றும் எழுந்தது. இன்றும் எழும். அநீதி அநீதிதான். தமிழக அரசுக்கு இதில் சம்மபந்தமில்லை என விட்டுவிட முடியாது. விஸ்வரூபத்தை என்ன பாடு பாடுபடுத்தினார்கள் என உங்களுக்கே தெரியும்” எனக் கூறினார்.