காங்கிரஸ் தவழுவதற்கு எடப்பாடியிடம் பாடம் படித்திருக்கிறது- கமல்ஹாசன்

 

காங்கிரஸ் தவழுவதற்கு எடப்பாடியிடம் பாடம் படித்திருக்கிறது- கமல்ஹாசன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

காங்கிரஸ் தவழுவதற்கு எடப்பாடியிடம் பாடம் படித்திருக்கிறது- கமல்ஹாசன்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிகளுக்கு குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்டதால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்காக காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாக அழைப்பு விடுத்தது. ஆனால் அந்த கட்சி கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணிக்கு வரவில்லை. எங்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பக்கம் காங்கிரஸ் சாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் திமுக அதற்கு 25 தொகுதிகளை வழங்கியது.

இந்நிலையில் மிண்ட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “ஸ்டாலினுக்கும் வசனம் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. துண்டு சீட்டுக் கிழித்து கிழித்து எங்கள் சீட்டு அங்கு போய்க்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். வதந்தி என்பது சொல்வது சீட்டுக்காக. காங்கிரஸ் தவழுவதற்கு எடப்பாடியிடம் பாடம் படித்திருக்கிறது.

Image

வெள்ளைகாரர்களை விரட்டி அடிக்க பாடுபட்ட காங்கிரஸ் கட்சி இப்போது கொள்ளைகாரர்களுக்கு வாட்ச்மேனாக இருக்கிறார்கள். நாம் ஆரம்பிக்க போகும் புரட்சி ,நம் தலைமுறையே வளமாக வாழும். புரட்சியின் நிறம் சிவப்பு. 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று நாங்கள் சொன்னோம் அதை ஸ்டாலின், அவர் பாணியில் அவருக்கே உரிய பாணியில் 10 லட்சம் வேலை வாய்ப்பு ஆண்டுக்கு என்று சொல்லுகிறார். திட்டத்தை சொன்னால் காப்பி அடிப்பார்கள் என்று சொன்னார் கமல்…அன்று சிரித்தார்கள் இன்று உண்மை என்று உணர்கிறார்கள்.” எனக் கூறினார்.