சாதிய அடிப்படையில் தேர்தலை சந்திக்க மாட்டோம்: கமல்ஹாசன்

 

சாதிய அடிப்படையில் தேர்தலை சந்திக்க மாட்டோம்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “ ஐந்தாம் கட்ட பிரச்சாரத்தில் மக்களின் பேரெழிச்சியை பார்க்கிறேன். இதில் எங்களது திட்டங்களை விளக்கி வருகிறோம். தொழில் துறைக்கான வாக்குறுதிகளை தெரிவிக்கிறேன். முதல்வர் தலைமையில் தொழில் துறை இருக்கும். ஒவ்வொரு காலாண்டிலும் கூட்டம் நடத்தப்படும். சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் பண பழக்கம் உறுதி செய்யப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு சார் தொழிலாளர்களாக மாற்றப்படுவர். தொழில் துவங்க அனுமதி எளிமைப்படுத்தப்படும்.

சாதிய அடிப்படையில் தேர்தலை சந்திக்க மாட்டோம்: கமல்ஹாசன்

கூட்டணி குறித்து தற்போது தெரிவிக்க முடியாது. இன்ட்டர்நெட் இல்லாமல் மடிக்கணினி கொடுத்து பயனில்லை. சாதிய அடிப்படையில் தேர்தலை சந்திக்க மாட்டோம். குற்ற வழக்குகளில் நீதி தாமதமாகக் கூடாது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுகிறேன். முழு நேர அரசியல் என்று எதுவும் இல்லை. அது பெரியாரின் கூற்றும் கூட” எனக் கூறினார்.

முன்னதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், “அச்சத்தில் இருந்து துணிவுக்கு; ஊழலில் இருந்து நேர்மைக்கு; தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.