உங்கள் தயவினால் சினிமா நட்சத்திரமானேன்; இப்போது சிறு விளக்காக மாற ஆசைப்படுகிறேன்! அணைத்துவிடாதீர்கள் – கமல்ஹாசன்

 

உங்கள் தயவினால் சினிமா நட்சத்திரமானேன்; இப்போது சிறு விளக்காக மாற ஆசைப்படுகிறேன்! அணைத்துவிடாதீர்கள் – கமல்ஹாசன்

கோவை மாவட்டம் மசக்காளிப்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், “கோவை மக்களிடம் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை பார்க்கிறேன். மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். வழி நெடுவிலும் தாய்மார்கள் வரவேற்பது பெரும் மகிழ்ச்சி. சினிமாகாரனை பார்க்க வந்த கூட்டம், என்கிறார்கள். வாக்கு வராது என்கிறார்கள். இதை நீங்கள்தான் மாற்ற வேண்டும். எந்த கட்சியும் அளிக்காத சலுகைகளை தாய்மார்களுக்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம், இல்லதரசிகளுக்கு ஊதியம் வழங்கவுள்ளோம்.

உங்கள் தயவினால் சினிமா நட்சத்திரமானேன்; இப்போது சிறு விளக்காக மாற ஆசைப்படுகிறேன்! அணைத்துவிடாதீர்கள் – கமல்ஹாசன்

ஒரு குழந்தை கட்சியை பெரும் தலைவர்களுக்கு நிகராக தூக்கி பிடித்ததற்கு நன்றியாக மக்களுக்கு சேவை செய்வதை தவிர வேறு வழியில்லை. இளைஞர்கள், இல்லத்தரசிகளுக்கு பல திட்டங்கள் இருக்கிறது. நான் வர நீங்கள் வழி செய்யுங்கள். சிந்தியுங்கள் செயல்படுங்கள். பேச அனுமதி இல்லையென்றால், செய்கை காட்டுகிறேன் சிந்தியுங்கள் செயல்படுங்கள் என்று.

5வது கட்டமாக கோவையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளது. இந்த பயணத்திற்காக போடப்பட்ட கொடிகள் அகற்றப்பட்டிருப்பது கூடுதல் விளம்பரத்தை தந்துள்ளது. அதற்கு அமைச்சர்களுக்கும், உடன் இருந்து பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி. இந்த ஆர்வத்தை மக்கள் பணியிலும் காட்டினால் நாங்கள் அரசியலுக்கே வந்திருக்க மாட்டோம். என் மீது நீங்கள் வைத்திருப்பது அன்பு மட்டுமல்ல. என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி விட்டது.

உங்கள் தயவினால் தான் நான் சினிமா நட்சத்திரமானேன். இப்போது உங்கள் ஒவ்வொருவருக்கும் சிறு விளக்காக மாற ஆசைப்படுகிறேன். அந்த விளக்கை ஏற்றி வையுங்கள். என் விளக்கை ஊழல் புயலில் அணைந்து விடாமல் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை ஆசியாவில் வேறு எந்த கட்சியும் அறிவிக்கவில்லை இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற போது, கொக்கரித்து சிரித்தவர்கள், தற்போது ஓய்ந்து போய் வேடிக்கை பார்க்கிறார்கள். இளைஞர்களை வேலை தேடி அலையும் தொழிலாளர்களாக இல்லாமல், வேலை தரும் முதலாளிகளாக மாற்ற திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். ஒவ்வொரு வீடுகளுக்கும் கணினி வழங்கப்படும். இது இலவசம் அல்ல. இது உங்கள் சொத்து. அரசின் சொத்து. ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே” எனக் கூறினார்.