“டெஸ்ட் வச்சோம் பாஸ் ஆகல” – பிகே ரகசியத்தை உடைத்த ஆண்டவர்!

 

“டெஸ்ட் வச்சோம் பாஸ் ஆகல” – பிகே ரகசியத்தை உடைத்த ஆண்டவர்!

மோடி, மம்தா பானர்ஜி என முக்கிய தலைவர்களின் தேர்தல் ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். முதலில் இவருக்கு தமிழ்நாட்டில் என்ட்ரி கொடுத்தது மக்கள் நீதி மய்யம் தான். மநீம உடன் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐபேக்கும் வேலை பார்த்தது. மக்கள் நீதி மய்யமும் கணிசமான வாக்குகளை ஒவ்வொரு தொகுதியிலும் பெற்றது.

“டெஸ்ட் வச்சோம் பாஸ் ஆகல” – பிகே ரகசியத்தை உடைத்த ஆண்டவர்!

சட்டப்பேரவை தேர்தலுக்கும் இந்தக் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரசாந்த் கிஷோருடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார் கமல். அதற்குப் பின்பு தான் திமுக தரப்பிடம் பேசி அங்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது ஒருபுறமிருந்தாலும் ஏன் சட்டப்பேரவை தேர்தலில் பிகே உடன் கமல் இணையவில்லை என்ற கேள்வி எழுந்தது. இது உட்கட்சி விவகாரம் என கூறி மநீம நிர்வாகிகளும் நழுவினர். தற்போது அந்த சிதம்பர ரகசியத்தை கமலே பிரச்சாரத்தில் வெளிப்படையாகப் போட்டுடைத்துள்ளார்.

“டெஸ்ட் வச்சோம் பாஸ் ஆகல” – பிகே ரகசியத்தை உடைத்த ஆண்டவர்!

மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியாவை ஆதரித்து நேற்று கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுகவின் ஆலோசகராக தற்போது பிரசாந்த் கிஷோர் இருக்கிறார். அவரை ஆலோசகராக நியமிக்க முதலில் நாங்கள் தான் விரும்பினோம். அதற்காக அவரை நேரில் அணுகினோம். அவரிடம் நிறைய கேள்விகளை முன்வைத்தோம்.

“டெஸ்ட் வச்சோம் பாஸ் ஆகல” – பிகே ரகசியத்தை உடைத்த ஆண்டவர்!

அவரை சோதனை செய்தோம். ஆனால் நாங்கள் வைத்த சோதனையில் பிரசாந்த் கிஷோர் பாஸ் ஆகவில்லை. எங்கள் சோதனையில் அவர் பெயிலாகிவிட்டார். அதனால் அவருடன் நாங்கள் ஒப்பந்தம் செய்யவில்லை. இப்போது அவரிடம் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. திமுக சுயமாக திட்டங்கள் எதையும் வகுக்கவில்லை. திமுக எங்களின் திட்டத்தைதான் காப்பி அடிக்கிறது. நான் கொடுத்த வாக்குறுதிகளை பெயர் மாற்றி திமுக அறிவிக்கிறது. பிரசாந்த் கிஷோர் தான் எங்களின் திட்டங்களைக் காப்பி அடிக்கிறார்” என்றார்.

“டெஸ்ட் வச்சோம் பாஸ் ஆகல” – பிகே ரகசியத்தை உடைத்த ஆண்டவர்!

குழப்பமாகப் பேசுவது கமலின் சுபாவம். இதே கேள்விக்கு கடந்த ஆண்டு ஒரு பதிலையும் இப்போது வேறு பதிலையும் கூறியிருக்கிறார். இரண்டில் எது உண்மை என்று தெரியவில்லை. கடந்த ஆண்டில், “பிரசாந்த் கிஷோர் ஒரு கெட்டிக்காரர். மக்கள் பலம் இருக்கக்கூடியவர்களுக்கு பலம் கூட்டக்கூடியவர். அவருக்கு என் வாழ்த்துகள். அதேசமயம் அவர் கணக்குப்பிள்ளை மாதிரியான ஒருவர்தான். கணக்குப்பிள்ளையை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு உங்களிடம் செல்வம் இருக்க வேண்டும். அப்போதுதான் கணக்குப்பிள்ளைக்கு வேலை இருக்கும். மாறாக செல்வத்தைக் கணக்குப்பிள்ளைகள் ஈட்டித்தரமாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார். ஆக செல்வம் இல்லாமல் தான் பிகே டெஸ்டில் பெயில் ஆகியிருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. எதுக்கு….