கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் முதல்வர் வேட்பாளர் நான்தான் – கமல்ஹாசன்

 

கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் முதல்வர் வேட்பாளர் நான்தான் – கமல்ஹாசன்

கூட்டணிக்கு யார் வந்தாலும் நான்தான் முதல்வர் வேட்பாளர் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தாங்கள் கேட்கிற இடங்களை கொடுக்காவிட்டால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவோம் என்று இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து முன்னர் அறிவித்தது போலவே, அக்கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். சமத்துவ மக்கள் கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் சரத்குமாரும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார். சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் இணைந்துள்ளன. இதையடுத்து மூன்றாவது அணி அமைக்கும் முடிவில், இன்று காலை சரத்குமாரும் ஐஜேக துணை பொதுச்செயலாளர் ரவிபாபுவும் மக்கள் நீதி மய்யம் சென்று கமல்ஹாசனை சந்தித்தார்.

கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் முதல்வர் வேட்பாளர் நான்தான் – கமல்ஹாசன்

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “மார்ச் 1 முதல் வேட்பாளர் தேர்வு நேர்காணல் மூலம் நடைபெற உள்ளது. மார்ச் 3 முதல் மீண்டு பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளவோம். கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் முதல்வர் வேட்பாளர் நான்தான். கூட்டணிக்காக நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ளமாட்டோம். நல்லத்திற்காக மட்டுமே சமரசம் செய்துகொள்வோம்” எனக் கூறினார்.