திமுகவில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது- கமல்ஹாசன்

 

திமுகவில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது- கமல்ஹாசன்

நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “ரஜினி வாய்ஸ் கொடுக்க நினைத்தால் அவர்தான் கொடுக்க வேண்டும். வாய்ஸ் என்பது கேட்டு பெறுவதல்ல. கூட்டணிக்குதான் பேச்சுவார்த்தை தேவை. தலைவர் என அழைக்கப்படும் நபர் ரஜினிகாந்த் இன்னும் அரசியலை கவனித்துக்கொண்டிருக்கிறார். வாய்ப்பு இருக்கிறது. என் பின்னால் வாருங்கள் என நான் சொல்லவில்லை. வாருங்கள் பணியாற்றுவோம் என ரஜினிகாந்த்திடம் என்கிறேன். நல்ல விஷயங்கள் எங்கு இருந்தாலும் தேடி எடுத்துக் கொள்வோம். நல்லவர்கள் எங்களுடன் சேர வேண்டும். கதவுகள் திறந்தே இருக்கிறது. தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம். கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு கூடி வருகின்றன. திமுகவில் இருந்தும் பேச்சுவார்த்தை நடந்தது. தூது வருவதை கருத்தில் கொள்ளமுடியாது தலைமை மட்டத்தில் வந்தால்தான் உறுதி.

திமுகவில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது- கமல்ஹாசன்

திமுகவில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. தூதுவிடுவதையெல்லாம் கருத்தில் கொள்ள முடியாது தலைமையிடம் இருந்து அழைப்பு வர வேண்டும். நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம்.” என பேசினார்.