• February
    25
    Tuesday

Main Area

Main



நான் எதற்காக அரசியலுக்கு வந்தேன் - கமல்ஹாசன் விளக்கம்! 

Kamalhassan
Kamalhassan

60 ஆண்டு கால திரைப்பயணம் நிறைவு பெற்றுள்ளது. தற்போது அரசியல் பயணம் தொடங்கியுள்ளது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், “ திருவள்ளுவரை எல்லா மதத்தினரும் தனதாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள்.  திருவள்ளுவரை ஒரு பிரிவினர் சொந்தம் கொண்டாட நினைப்பது புதிதல்ல. இது போன்று நிகழ்வு பலமுறை நடந்துள்ளது. அவர் அனைவராலும் கொண்டாட பட வேண்டியவர். திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் சொந்தமல்ல. எனவே அவருக்கு வண்ணம் பூச தேவையில்லை. 

Kamalhassan

நடிப்பு, கலை என்பது என் தொழில், அரசியல் என்பது மக்களுக்காக செய்யும் எனது கடமை.  கடமையை செய்யவே அரசியலுக்கு வந்தேன். உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக தான் உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன” எனக் கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.