‘எனக்கு சாப்பாடு ஊட்டி, நீச்சல் கற்றுக்கொடுத்தவர் எம்ஜிஆர்’- கமல்ஹாசன்

 

‘எனக்கு சாப்பாடு ஊட்டி, நீச்சல் கற்றுக்கொடுத்தவர் எம்ஜிஆர்’- கமல்ஹாசன்

தருமபுரியில் விவசாயிகள் மற்றும் வணிகர்களுடன் அரங்கத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பங்கேற்றார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், “தென்னைக நலம் காக்கும் ஒரே கட்சி மக்கள் நீதி மையம் தான். நான் குழந்தையாக இருக்கும்போது, எனக்கு சாப்பாடு ஊட்டி, நீச்சல் கற்றுக் கொடுத்தவர் எம்ஜிஆர். அங்கு பல நல்ல விஷயங்களை கற்று கொண்டு தான் இன்று இந்த மேடைக்கு வந்து இருக்கிறேன். நேர்மையானவர்கள் எல்லாமே என் அண்ணன், அப்பன் என்றும், தலைவர் என்று சொல்வார்கள்.  அதற்கு பட்டா போட்டு உரிமை கொண்டாடத் தேவையில்லை.

‘எனக்கு சாப்பாடு ஊட்டி, நீச்சல் கற்றுக்கொடுத்தவர் எம்ஜிஆர்’- கமல்ஹாசன்

அதற்கு அதிமுகவினருக்கு தகுதி இல்லை. அவர் போட்ட இரண்டு இலைகளில் இங்கே இரண்டு பேர் சாப்பிடுகிறார்கள். ஆலமரம் போல் விருட்சமாக வேண்டும் என்று நினைத்தவர் எம்ஜிஆர். இங்கே இரண்டு பேர் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு, இருக்கிறார்கள். இங்கு நாற்காலியை ஆளுக்கொரு பக்கம் இழுத்து உடைக்கப் பார்க்கிறார்கள். அது உடையத்தான் போகிறது. அதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள். அவர்கள் அடித்து கொள்ளட்டும் நமக்கு வேலை இருக்கிறது. அதனால்தான் சொன்னேன் சில கூட்டுகள் உடையும், உருவங்கள் மாறும் என அன்று சொன்னேன்.

எங்களுக்கு எப்பொழுதுமே மக்களுடன் தான் கூட்டணி. ஒவ்வொரு இடங்களிலும் எங்களது கூட்டணி அணி அணியாக திரண்டு தம்ஸ் அப்(கட்டை விரல்) காட்டுகிறார்கள். தாய்மார்கள் உள்ளங்கையை காட்டி ஆசீர்வதிக்கின்றனர். தங்களது தொகுதியில் முதலீடு செய்து 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்தவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள் மக்கள் தலைவர்களை பற்றி யோசிக்கிறோம். அதனை நீங்களும் யோசிக்க வேண்டும், இந்த தலைவரை நீங்கள் யோசித்தால், கண்டிப்பாக நீங்கள் ஓட்டு போடுவது மக்கள் நீதி மய்யத்திற்குதான். தென்னகத்தின் நலம் காக்கும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்” என தெரிவித்தார்.