பிக்பாஸ் பக்கம் சென்றுவிட்டாரா? கமலின் கட்சி என்ன ஆனது?- மநீம மாநில பொதுச் செயலாளர் விளக்கம்

 

பிக்பாஸ் பக்கம் சென்றுவிட்டாரா? கமலின் கட்சி என்ன ஆனது?- மநீம மாநில பொதுச் செயலாளர் விளக்கம்

நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றாலும் அதிலும் அரசியல் கலந்து பேசுவார் கமல்ஹாசன். பிக்பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்கப்போகிறது. அதே சமயத்தில் தேர்தலும் வரப்போகிறது. பிக்பாஸ் புரோமோ வெளியிடும் அளவிற்கான ஆர்வத்தை அரசியலில் காட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிக்பாஸ் பக்கம் சென்றுவிட்டாரா? கமலின் கட்சி என்ன ஆனது?- மநீம மாநில பொதுச் செயலாளர் விளக்கம்

இந்நிலையில் புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், “வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை யார் முதலமைச்சராக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி, அதிமுக திமுகவிற்கு மாற்றாக நாங்கள் இருப்போம், ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் ஆனால் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வோம், தற்போதைய காலகட்டத்தில் இணையத்தில் கருத்து சொல்வது மக்களை சென்றடைகிறது, கமல்ஹாசன் மக்கள் பிரச்சனைகளுக்கு இணையதளத்தில் கருத்து சொல்லி வருகிறார். இதைத் டிவிட்டர் அரசியலாக பார்க்க முடியாது, விவசாயி என்று கூறிக்கொண்டு வேளாண் சட்ட மசோதாவை தமிழக முதல்வர் ஆதரித்து வருகிறார். மக்களுக்கு எதிரான சட்டம் என்பதால் நாங்களும் இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்” எனக் கூறினார்.