வானதியிடம் வீழ்ந்தார் “முதல்வர் வேட்பாளர்” கமல்ஹாசன்!

 

வானதியிடம் வீழ்ந்தார் “முதல்வர் வேட்பாளர்” கமல்ஹாசன்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி திமுக 159 தொகுதிகளிலும் அதிமுக 75 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. இதில் பெரும்பாலான தொகுதிகளில் முடிவுகள் வெளியாகிவிட்டன. தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளர்களாக ஐவர் களமிறங்கினர். அதில் எடப்பாடியும் ஸ்டாலின் அமோக வெற்றி பெற்றனர்.

வானதியிடம் வீழ்ந்தார் “முதல்வர் வேட்பாளர்” கமல்ஹாசன்!

ஆனால் சீமான் தோல்வியைத் தழுவினார். டிடிவி தினகரனுக்கு தோல்விமுகம் தெரிகிறது. காலையிலிருந்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மும்முனை போட்டி நிலவியதால் கடும் இழுபறி நிலையே நீடித்தது. 22 சுற்றுகளில் கமல்ஹாசனே முன்னிலையில் இருந்தார். ஆனால் 23ஆவது சுற்றிலிருந்து வானதி சீனிவாசன் லீட் எடுத்தார். அதிலிருந்து கமல்ஹாசன் முன்னிலை பெறவே இல்லை.

வானதியிடம் வீழ்ந்தார் “முதல்வர் வேட்பாளர்” கமல்ஹாசன்!

தற்போது அனைத்துச் சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டு ஒருவழியாக வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. வானதி சீனிவாசனிடம் கமல்ஹாசன் வீழ்ந்துவிட்டார். சுமார் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மூன்றாவது இடம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மயூரா ஜெயக்குமாருக்குக் கிடைத்துள்ளது.