கமல்ஹாசன் சென்னையை விட்டு கோவையை தேர்ந்தெடுத்தது ஏன்? அங்கு என்னதான் இருக்கு?

 

கமல்ஹாசன் சென்னையை விட்டு கோவையை தேர்ந்தெடுத்தது ஏன்? அங்கு என்னதான் இருக்கு?

கோவை மாவட்டத்தின் தலைமையிடமாக இருப்பது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தின் அடையாளங்களாக விளங்குகிறது. நகரின் மையமாகவும், வணிக கேந்திரமாகவும் உள்ள டவுன்ஹால், காந்திபுரம், உக்கடம் இந்த தொகுதியில்தான் வருகின்றன. மேலும் இந்த தொகுதியில் ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், ஐ.டி. கம்பெனிகள் அதிகளவில் இருக்கும் தொழில் பூங்காவா செயல்படுகிறது. இதுதவிர அரசுத்துறை அலுவலகங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவல் ஆணையர் அலுவலகம், வரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மத்திய தந்தி அலுவலகம், மத்திய சிறைச்சாலை, வ.உ.சி பூங்கா, நேரு விளையாட்டு அரங்கம், கோவை ரெயில் நிலையம், உக்கடம் மற்றும் காந்திபுரத்தில் உள்ள உள்ளூர், வெளியூர் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இந்த தொகுதிக்குள் வருகிறது.

கமல்ஹாசன் சென்னையை விட்டு கோவையை தேர்ந்தெடுத்தது ஏன்? அங்கு என்னதான் இருக்கு?

கோவையில் இருப்பவர்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த தொகுதியில் உள்ள பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களுக்கு வந்துதான் செல்ல வேண்டும். போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகவும், பலதரப்பட்ட சமூகத்தினரும் வசிக்கும் பகுதியாகவும் உள்ளது. இந்த தொகுதியில் மொத்தமாக 2,52,389 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 1,25416, பெண்கள்- 1,25,950, மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் அதிகம் என்பதால் கமல்ஹாசன் இந்த தொகுதியில் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது

இதுவரை இந்த தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக 5 ஆண்டுகளும், அதிமுக 5 ஆண்டுகளும் வெற்றிப்பெற்றுள்ளன. காங்கிரஸ் 4 முறை வெற்றி பெற்று உள்ளது. தற்போதைய எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த அம்மன் அர்ச்சுணன் உள்ளார்.

இதுவரையிலான எம்எல்ஏகளின் பட்டியல்

1951- சுப்பிரமணியன்(காங்கிரஸ்)
1957- மருதாசலம் (இந்திய பொதுவுடமை கட்சி)
1962- பழனிசாமி (காங்கிரஸ்)
1967- கோவிந்தராஜூலு (தி.மு.க)
1971- கோபால்(தி.மு.க)
1977- அரங்கநாயகம் (அ.தி.மு.க)
1980- அரங்கநாயகம் (அ.தி.மு.க)
1984- ராமநாதன் (தி.மு.க)
1989- ராமநாதன் (தி.மு.க)
1991- செல்வராசு (காங்கிரஸ்)
1996- தண்டபாணி (தி.மு.க)
2001- மகேஸ்வரி (காங்கிரஸ்)
2006- மலரவன் (அ.தி.மு.க)
2011- சேலஞ்சர்துரை (அ.தி.மு.க.)
2016- அம்மன் அர்ச்சுணன் (அ.தி.மு.க.)