“#நான் கேட்பேன்” என சொல்லிக்கொண்டு ஊர் சுற்றும் கமல் இன்னும் கார் இன்சூரன்ஸ் கட்டலையாம்!

 

“#நான் கேட்பேன்” என சொல்லிக்கொண்டு ஊர் சுற்றும் கமல் இன்னும் கார் இன்சூரன்ஸ் கட்டலையாம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி மக்கள் நீதி மய்யத்தின் களப்பணி தொடங்கிவிட்டது. பரப்புரையின் போது ஆளும் கட்சியையும் அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சியையும் தொடர்ந்து விமர்சித்து வரும் கமல்ஹாசன், #நான் கேட்பேன், #நான் கேட்பேன் என பல்வேறு கருத்துக்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார். அவரது விமர்சனத்துக்கு அமைச்சர்கள் பலர் பதில் கொடுத்து வருகின்றனர்.

Image

இப்படி ஊர் ஊராக காரில் பரப்புரை மேற்கொண்டுவரும் கமல்ஹாசன் அவர் காருக்கான இன்சூரன்ஸை இன்னும் கட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான ஸ்கீரின் ஷாட்டை ட்விட்டரில் வைரலாக்கிவரும் நெட்டிசன்கள், சிஸ்டம் கெட்டு கிடக்குனு கமல்ஹாசன் நண்பர் ரஜினி சொன்னது சரி தான் என கிண்டலடித்துவருகிறார்கள். மேலும் சிலர் கமல் ஸ்டைலிலேயே #நான் கேட்பேன் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.