கூட்டணி கட்சிகளுக்கு அள்ளிக்கொடுத்த கமல்! நள்ளிரவில் கையெழுத்தான ஒப்பந்தம்!!

 

கூட்டணி கட்சிகளுக்கு அள்ளிக்கொடுத்த கமல்! நள்ளிரவில் கையெழுத்தான ஒப்பந்தம்!!

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பல நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை நள்ளிரவில் முடிவுற்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 15ம் தேதி தொடங்கவிருக்கிறது. அதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக தொகுதி பங்கீடு பணியில் ஈடுபட்டிருக்கின்றன. திமுக, அதிமுகவுக்கு எதிராக மூன்றாவது அணியாக உருவாகிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யமும் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பல பெரிய கட்சிகளுக்கு கூட குறைவான இடங்களே வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவும் யோசித்து யோசித்துதான் கூட்டணி கட்சிகளுக்கு இடத்தை ஒதுக்கி வருகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு அள்ளிக்கொடுத்த கமல்! நள்ளிரவில் கையெழுத்தான ஒப்பந்தம்!!

இந்த தேர்தலில் முதன்முறையாக மூன்றாவது அணி என சொல்லக்கூடிய அளவுக்கு மநீம, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி வைத்துள்ளன. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியில் இருக்கும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சி 154 இடங்களில் போட்டியிடவிருப்பதாக அறிவித்து தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளன. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சியான காங்கிரஸுக்கே அதிகபட்சமாக 25 தொகுதிகள் தான் கொடுக்கப்பட்டிருக்கும் சூழலில் அதிமுக, திமுகவிலிருந்து மநீமவில் இணைந்த சரத்குமாரும், பாரிவேந்தரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்த கட்சிகள் இடங்கள் கொடுத்தாச்சு வேட்பாளர்களுக்கு எங்க போறது என விழிபிதுங்கி நிற்கின்றன.