“தோல்வி எனில் துவள வேண்டாம்” – கமல்ஹாசன் உருக்கமான கடிதம்!

 

“தோல்வி எனில் துவள வேண்டாம்” – கமல்ஹாசன் உருக்கமான கடிதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடந்துமுடிந்தது. சுமார் ஒரு மாதங்களுக்கு முன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி அரசியல் களத்தைச் சூடாக்கியிருக்கிறது. அனைத்தும் திமுகவிற்குச் சாதகமாக வந்திருப்பதால் வெற்றிக்களிப்பில் திமுக தலைமை இருக்கிறது. மறுபுறம் அதிமுகவோ இதெல்லாம் கருத்து திணிப்பு என்று கூறி சுய சமாதானம் செய்து கொண்டிருக்கிறது.

“தோல்வி எனில் துவள வேண்டாம்” – கமல்ஹாசன் உருக்கமான கடிதம்!

இதற்கு நடுவே நாம் தமிழர் சீமான், அமமுக தினகரன் ஆகியோரும் தங்களது தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “உயிரே உறவே தமிழே, நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள். ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்துவிடக் கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை.

Image

தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புமே எனக்கு முக்கியமானது. தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பது கிடையாது என்பதை நாம் நன்கறிவோம். இந்த தேர்தல் நமக்கு ஒரு புதிய அனுபவம். புதிய தொடக்கம். மக்களுக்கு நம் மீதிருந்த நம்பிக்கையை உணர்ந்திருக்கிறோம். மக்கள் அன்பே நம் பலம். வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை. தோல்வி எனில் துவள வேண்டியதில்லை. எதுவரினும் மக்கள் பணிகளைத் தொடருங்கள். இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். மக்களுக்காக, மக்களுடன் களத்தில் நிற்போம். நாளை நமதே!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.