“இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம், வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம்” – கமல்ஹாசன் ட்வீட்!

 

“இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம், வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம்” – கமல்ஹாசன் ட்வீட்!

தீபாவளி பண்டிகையையொட்டி பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர். பல மாதங்களாக வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு, இந்த பண்டிகை புத்துணர்ச்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பண்டிகைக்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையுடனும், விழுப்புணர்வுடனும் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம், வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம்” – கமல்ஹாசன் ட்வீட்!

தமிழக முதல்வர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம், வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம்” – கமல்ஹாசன் ட்வீட்!

அந்த பதிவில், “பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான். அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம். இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம். வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம். மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.