‘போலீசாருக்கு லீவு: வெறும் பேச்சாய் இல்லாமல் நடைமுறைப் படுத்தவேண்டும்’ – கமல்ஹாசன் ட்வீட்!

‘போலீசாருக்கு லீவு: வெறும் பேச்சாய் இல்லாமல் நடைமுறைப் படுத்தவேண்டும்’ – கமல்ஹாசன் ட்வீட்!

கொரோனா வைரஸ் பரவிய காலக்கட்டத்தில் இருந்து காவல்துறையினருக்கு ஓய்வு என்பது இல்லாமலே போய்விட்டது. பணிச்சுமையாலும், மன அழுத்தத்தாலும் காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால், வாரத்திற்கு ஒருமுறை காவல்துறையினருக்கு விடுப்பு வழங்க வேண்டும் என சட்ட ஒழுங்கு துறை டிஜிபி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு பலரும் வரவேற்பு அளித்தனர். இது வரும் உத்தரவோடு மட்டும் முடிந்து விடாமல், காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்திட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

‘போலீசாருக்கு லீவு: வெறும் பேச்சாய் இல்லாமல் நடைமுறைப் படுத்தவேண்டும்’ – கமல்ஹாசன் ட்வீட்!

இந்த நிலையில் காவல்துறையினருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு.

‘போலீசாருக்கு லீவு: வெறும் பேச்சாய் இல்லாமல் நடைமுறைப் படுத்தவேண்டும்’ – கமல்ஹாசன் ட்வீட்!

சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.