‘நீங்க தான் போவீங்கன்னு உறுதி ஆயிடுச்சா’ எவிக்சன் குறித்து நாசுக்காக பேசும் கமல்ஹாசன்!

 

‘நீங்க தான் போவீங்கன்னு உறுதி ஆயிடுச்சா’ எவிக்சன் குறித்து நாசுக்காக பேசும் கமல்ஹாசன்!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 கோபம், அழுகை, சிரிப்பு, காதல், அன்பு என போட்டியாளர்களின் பல முகங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்ன தான் இருந்தாலும் இது ஒரு போட்டி என்றிருக்கையில் வாரம் ஒரு முறை ஒரு கண்டஸ்டன்ட் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் முதன்முதலில் மக்களால் எவிக்ட் செய்யப்பட்டார். இரண்டாவது முறை ஆஜித் எவிக்ட் ஆகிறார் என கமல்ஹாசன் அறிவித்த நிலையில், தன்னிடம் இருந்த எவிக்சன் ஃப்ரீ பாஸ் மூலமாக வீட்டில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார் ஆஜித்.

‘நீங்க தான் போவீங்கன்னு உறுதி ஆயிடுச்சா’ எவிக்சன் குறித்து நாசுக்காக பேசும் கமல்ஹாசன்!

அந்த வகையில் இந்த வாரத்திற்கான எவிக்சன் இன்று நடைபெற உள்ளது. மொத்தமாக 11 ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று கமல்ஹாசன் 6 ஹவுஸ்மேட்ஸை காப்பாற்றிவிட்டார். இந்த நிலையில் இன்று யார் எவிக்ட் ஆகப்போகிறார்கள் என்பது குறித்து கமல்ஹாசன் பேசுவது போல முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

‘நீங்க தான் போவீங்கன்னு உறுதி ஆயிடுச்சா’ எவிக்சன் குறித்து நாசுக்காக பேசும் கமல்ஹாசன்!

அதில், நான் வந்த காரணம் எல்லாருக்கும் தெரியும். முக்கியமான தருணத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். ஆஜித் இந்த வாட்டி என்ன சொல்றீங்க ஆஜித் என கமல்ஹாசன் கேள்வி கேட்க, ஆஜித் எச்சில் முழுங்குகிறார். பிறகு நான் தான் எவிக்ட் ஆகுவேன் என வேல்முருகன் சொல்ல, நீங்க ஜோசியர் ஆகிட்டீங்களா? அப்போ நீங்க வெளியே போவது கன்பார்ம்மா? என கமல்ஹாசன் கேட்கிறார். பின்னர் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒருவரை வெளியே அனுப்பி வைப்பது போல புரோமோ முடிகிறது. வேல்முருகன் தான் வெளியேற்றப்படுவார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.