வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி பல மர்மங்கள்… பகீர் கிளப்பும் கமல்ஹாசன்!

 

வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி பல மர்மங்கள்… பகீர் கிளப்பும் கமல்ஹாசன்!

சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த பிறகு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழந்து விடுவதும் மர்ம கன்டெய்னர்கள் நள்ளிரவில் வளாகங்களுக்குள் உள்ளும் வெளியேயும் உலாவுவதும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகிறது. விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும். தேர்தல் முறையாக நடத்தப்பட்டு முடிவுகள் நேர்மையாக அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையை வாக்காளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உருவாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று கூறினார்.

வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி பல மர்மங்கள்… பகீர் கிளப்பும் கமல்ஹாசன்!

தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே 30% வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில்லை. வாக்குப்பதிவிலும் வாக்கு எண்ணிக்கையிலும் இது போன்ற மர்மங்கள் இருப்பதால் பொதுமக்களின் ஜனநாயக பங்கு இன்னும் குறையும் அபாயம் உள்ளது. அது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக அமையும். இது முதல் கட்டம் தான் இன்னும் நிறைய புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதை திரட்டி கொண்டு வந்து அவர்களிடம் காட்ட உள்ளோம். இது ஜனநாயகத்தை காப்பாற்றும் ஒரு முயற்சி என்றார்.

மேலும், புதிதாக எங்களுக்கு அறிவிக்கப்படாத கட்டிடப் பணிகள் சில அங்கே நடைபெறுகின்றன. இவை சந்தேகத்துக்கு வழிவகுக்கிறது. மெஷின் நல்லதாக இருந்தாலும் அதை கண்டவர்கள் கையில் இருப்பதால் சந்தேகத்தை கிளப்புகிறது. முகமூடி வேறு இப்போது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி மர்மமான பல விஷயங்கள் நடக்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.