‘அரசு நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும்’.. கமல்ஹாசன் ட்வீட்

 

‘அரசு நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும்’.. கமல்ஹாசன் ட்வீட்

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளும் அதற்கு பிறகு தான் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

‘அரசு நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும்’.. கமல்ஹாசன் ட்வீட்

இதனிடையே அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானதால், அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடக்குமா என பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதனையடுத்து வரும் 13 ஆம் தேதி முதல்வர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆன்லைனில் கல்வி இல்லை, தொலைக்காட்சி வாயிலாக தான் பாடம் நடத்தப்படும் என்று மாற்றி கூறினார். இது மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் சொன்னதை விமர்சித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. அரசு இதில் நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.