ரெம்டெசிவிருக்காக காத்துக் கிடக்கும் மக்கள்.. அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்!

ரெம்டெசிவிருக்காக காத்துக் கிடக்கும் மக்கள்.. அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்!

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அந்த மருந்தை வாங்க மக்கள் கூட்டம் குவிகிறது. கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து ரூ.30 முதல் 40 ஆயிரம் வரை விற்பனையாவதாக புகார்கள் எழுந்தன.

ரெம்டெசிவிருக்காக காத்துக் கிடக்கும் மக்கள்.. அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்!

பாமர மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ரெம்டெசிவிர் மருந்தின் உண்மையான விலைக்கே விற்பனை செய்ய அரசு வழிவகை செய்தது. சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இங்கிருந்து தான் மருந்து வாங்கிச் செல்ல வேண்டும் என்பதால், நோயாளிகளின் உறவினர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்துக் கிடந்து மருந்தை வாங்கிச் செல்கின்றனர்.

ரெம்டெசிவிருக்காக காத்துக் கிடக்கும் மக்கள்.. அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்!

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.