இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும்… ஆத்திரத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு!

 

இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும்… ஆத்திரத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு!

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் ஊரடங்கை மீறி திருவிழா நடத்தினர். தங்களிடம் அனுமதி பெறாமல் திருவிழா நடத்தியதற்காக ஊரார் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமென பிற சாதியை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர். அதன் படி, பட்டியலினத்தை சேர்ந்த பெரியவர்கள் 4 பேர் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும்… ஆத்திரத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு!

தமிழகத்தில் பட்டியலின மக்கள் அவமதிக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், காலில் விழ வைக்கும் அளவுக்கு அவர்கள் மோசமாக நடத்தப்படுவது அரசின் கவனத்துக்கு எட்டியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பலர் கண்டனக் குரல்களை எழுப்பி வருகிறார்கள்.

இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும்… ஆத்திரத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு!

இந்த நிலையில், ஒட்டனேந்தல் கிராமத்தில் பட்டியலின மக்கள் காலில் விழ வைக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா?. திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.