ஏழ்மையில் தகிக்கும் தமிழகம்.. கமல் ஆதங்கம்!

 

ஏழ்மையில் தகிக்கும் தமிழகம்.. கமல் ஆதங்கம்!

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏழ்மையில் தகிக்கும் தமிழகம்.. கமல் ஆதங்கம்!

அதில், 23 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பில் தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பள்ளி செல்லவேண்டிய சிறுவர்கள் குடும்பம் காக்க உழைக்கச் சென்று விட்டார்கள். தமிழகம் ஏழ்மையில் தகிப்பதன் அடையாளம் இது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற தலைப்பை முன்னிறுத்தி முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்வதை கமல்ஹாசன், ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழ்மையில் தகிக்கும் தமிழகம்.. கமல் ஆதங்கம்!

எல்லாவற்றிலும் தமிழகம் முதலிடம் என பெருமையாக சொல்லிக் கொள்ளும் முதல்வருக்கு, நாட்டின் பல மூலைகளில் ஏழை மக்கள் போராடிக் கொண்டிருப்பது கண்ணுக்கு தெரியவில்லை போல.. என்றெல்லாம் கடுமையாக பேசி வருகிறார்கள். அந்த வகையில், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கமல்ஹாசன் இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.