‘ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவருக்கு நடந்த அநீதி இறையாண்மைக்கு எதிரானது’.. கமல்ஹாசன் பதிவு!

 

‘ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவருக்கு நடந்த அநீதி இறையாண்மைக்கு எதிரானது’.. கமல்ஹாசன் பதிவு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி அருகே இருக்கும் ஆத்துப்பாக்கம் பகுதியின் பஞ்சாயத்து தலைவர் அமிர்தத்தை தேசியக் கொடி ஏற்ற விடாமல் ஊராட்சி மன்ற செயலாளரும் அவரது ஆதரவாளர்களும் தகராறு செய்துள்ளனர். இதே போல, குடியரசு தின விழாவிலும் அவரை கொடியேற்ற விடமால் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பஞ்சாயத்து தலைவர், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், தனக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை என்றும் எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் தடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவருக்கு நடந்த அநீதி இறையாண்மைக்கு எதிரானது’.. கமல்ஹாசன் பதிவு!

அந்த புகாரின் பேரில், கொடியேற்ற விடாமல் செய்த்து ஊராட்சி மன்ற செயலாளரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்ற விடாமல் அவமதித்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து மக்கள் நீதிமய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.அமிர்தம் அவர்களுக்கு நடந்த அநீதி, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்.சாதிப் பிணி ஒழிய, நம் குரல்கள் ஒன்றுபடாவிட்டால் குரலற்றவர்களின் குரல்வளை நெறிக்கப்படுவது தொடரும்.
தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் வரை குரல் கொடுப்போம்.” குறிப்பிட்டுள்ளார்.