‘எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமை’..தமிழக டி.ஐ.ஜி ராஜேஸ்வரிக்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் ட்வீட்

 

‘எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமை’..தமிழக டி.ஐ.ஜி ராஜேஸ்வரிக்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் ட்வீட்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த 39 அதிகாரிகளுள், தமிழக முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கனின் பேத்தி ராஜேஸ்வரியும் ஒருவர். தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரெண்டாக பணியாற்றி வந்த அவரை தமிழக அரசு, பதிவு உயர்வு கொடுத்து சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி நியமிக்கப்பட்டார். இதனால் ஐபிஎஸ் ராஜேஸ்வரிக்கு பலரும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

‘எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமை’..தமிழக டி.ஐ.ஜி ராஜேஸ்வரிக்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் ட்வீட்

இந்த நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஐபிஎஸ் ராஜேஸ்வரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நேர்மையின் அடையாளமாம் கக்கன் அய்யா அவர்களின் பெரும் ரசிகர் என் தகப்பனார் திரு. D. ஸ்ரீனிவாசன். அவரின் பேத்தி, திருமிகு.ராஜேஸ்வரி அவர்கள் தமிழக டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப்பது எங்கள் குடுமபத்திற்கு கிடைத்த பெருமையும் கூட. நாளை நமதாகட்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.