இரட்டை வேடம்… பாஜகவை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்

 

இரட்டை வேடம்… பாஜகவை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்

மேகதாது அணை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா அணை கட்டாமல் ஓயமாட்டோம் என்று கூறிவந்தார். அவர் பதவி விலகிய பிறகு முதல்வராக பதவியேற்றிருக்கும் பசவராஜ் பொம்மையும் அணை கட்டியே தீருவோம் என்று கூறிவருகிறார்.

இரட்டை வேடம்… பாஜகவை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்

மேகதாதுவில் அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு போர்க்கொடியை உயர்த்தியுள்ள நிலையில் தமிழக பாஜகவினரும் தமிழக அரசுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி கர்நாடக பாஜக அரசை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஆனால், தமிழக பாஜகவினர் இரட்டை வேடம் போடுவதாக அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கர்நாடகவில் ஆளும் அரசு பாஜக, அதை எதிர்த்து தமிழக பாஜகவினர் போராட்டம் நடத்துவது கண் துடைப்பு நாடகம் என விமர்சித்துள்ளனர்.

இந்த நிலையில், மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் தான் போடுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக சாடியுள்ளார். இந்தியாவில் அதிக இரட்டை வேடம் ஏற்றவன் நான், அப்படி இரட்டை வேடம் போடுபவர்களை நான் வெகுவாக அறிவேன் என்று அவர் கூறியுள்ளார்.