பிக் பாஸில் கமல்ஹாசனுக்கு ‘ஒரு நாள்’ சம்பளம் இத்தனை கோடியா…?!

 

பிக் பாஸில் கமல்ஹாசனுக்கு ‘ஒரு நாள்’ சம்பளம் இத்தனை கோடியா…?!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு ரூ.60 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. குறிப்பாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்லலாம். ஒவ்வொரு சீசனுக்கும் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது. அண்மையில் பிக் பாஸ் சீசன் 5க்கான அறிவிப்பு வெளியானது. விஜய் டிவியில் அதன் புரோமோவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ரக்ஷிதா, பவானி ரெட்டி, புகழ், குக் வித் கோமாளி கனி, மிளா உள்ளிட்ட பலர் சீசன் 5ல் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிக் பாஸில் கமல்ஹாசனுக்கு ‘ஒரு நாள்’ சம்பளம் இத்தனை கோடியா…?!

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனின் சம்பளம் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கமல்ஹாசன் போட்டியாளர்களை அறிவிப்பார். ஒரு நாள் ஷூட்டிங் அது. அதன் பிறகு, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உரையாடுவது போல நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடுகள் ஒரே நாளில் தான் எடுக்கப்படும்.

பிக் பாஸில் கமல்ஹாசனுக்கு ‘ஒரு நாள்’ சம்பளம் இத்தனை கோடியா…?!
n 5

100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் ஒரு வாரத்திற்கு 4 கோடி வீதம் 15 வாரங்களுக்கு 60 கோடி சம்பளமாக பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் சீசனின் போது நான்கில் ஒரு மடங்கு வாங்கி வந்த அவரது சம்பளம் ஒவ்வொரு சீசனுக்கும் கூடிக் கொண்டே செல்கிறது. ஐந்தாம் சீசனுக்கான சம்பளப் பணத்தை முன்பணமாக பெற்றுக்கொண்ட கமல்ஹாசன் தேர்தலுக்கு செலவு செய்து விட்டதாக அண்மையில் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.