‘ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை’ – கமல்ஹாசன் விமர்சனம்!

 

‘ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை’ – கமல்ஹாசன் விமர்சனம்!

தமிழகத்தை வளர்ச்சி அடையாத மாநிலங்களோடு ஒப்பிடுவது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை போல இருப்பதாக கமல்ஹாசன் விமர்சித்தார்.

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் நேற்று மதுரை மற்றும் திண்டுக்கல்லில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், இன்று திண்டுக்கல் சென்றார். அங்கிருந்து விருதுநகர் செல்லும் வழியில் காரின் கூரை மீது ஏறி நின்ற போது மைக்கில் பேச போலீசார் அனுமதி அளிக்காததால், கைகளை அசைத்த படி சென்றார்.

‘ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை’ – கமல்ஹாசன் விமர்சனம்!

இந்த நிலையில் பிரச்சாரத்தின் போது பேசிய கமல்ஹாசன், ‘உலகோடு போட்டியிடுவது மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம். தமிழ்நாட்டிற்கு தரணியில் முதலிடம் பெறும் தகுதி இருக்கிறது. வளர்ச்சி அடையாத பிற மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக் கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை போல இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

மேலும் நலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் உலகத்தரத்தில் போட்டி போட வேண்டும் எனக் கூறிய கமல்ஹாசன், ‘காந்தி மீண்டும் ஏன் வர முடியாது. நீங்கள் அதற்கு வழி விடுங்கள். நான் காந்திக்கு பீ டீம். மக்கள் நீதி மய்யத்தில் என்னோடு இருப்பவர்கள் வெற்றியை தொட்டுப் பார்த்து வந்தவர்கள்’ என்றும் கூறினார்.