• April
    03
    Friday

Main Area

Mainபக்கா அரசியல்வாதியான கமல்ஹாசன்; கொதிக்கும் எழுத்தாளர்!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 18 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறுகிறது. இவ்விரு தேர்தல்களையும் எதிர்கொள்ள தயாராகியுள்ள தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு அரசியல் களம் கண்ட நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் களம் கண்டுள்ளது. கட்சி ஆரம்பித்த பின்னும், டிவிட்டரில் அரசியல் பேசிக் கொண்டிருந்த சமயத்திலும், தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்தார் கமல்ஹாசன். மேலும் பல பகுதிகளுக்கு சென்று உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவிகளையும் செய்து வந்தார்.

தனது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை கோவையில் வெளியிட்ட கமல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, ஜல்லிக்கட்டு போராட்டம், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டது, டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், அரியலூர் அனிதா நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் என தன்னை அரசியலுக்கு வர வைத்த சம்பவங்களை பட்டியலிட்டு பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான வீடியோ காட்சிகளும் திரையிடப்பட்டது.

அதேபோல், புதுச்சேரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கமல், பெண் ஒருவருக்கு செய்த உதவிகளை திரையில் போட்டுக் காட்டி வாக்கு சேகரித்ததாக தெரிகிறது. பொதுவாக, அரசியல்வாதிகள் அனைவரும் தாங்களாகவே எதுவும் உதவிகள் செய்வதில்லை. அப்படியே ஏதேனும் அரசு பணத்தில் நலத்திட்ட உதவிகள் செய்தால் கூட அதனை அதிகளவில் விளம்பரப்படுத்துவர். எதோ தங்கள் பாக்கெட்டில் இருந்து செலவு செய்தது போல பில்டப்புகள் ஓவராக இருக்கும். அதுவும் தற்போது தேர்தல் நேரம் என்பதால், சொல்லவே வேண்டாம். 

இந்நிலையில், புதுச்சேரியில் தான் செய்த உதவியை திரையிட்டுக் காட்டிய கமல்ஹாசனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆன்மன், மன்னார்குடியில் படுத்த படுக்கையாக இருந்த ஒரு சகோதரிக்கு மக்கள் நீதி மய்யம் பத்தாயிரம் கொடுத்தது என்று பெரிய திரையில் அவர் படத்தைப் போட்டுக் காட்டி நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால், இது போல் நிறையச் செய்வோம் என்று புதுச்சேரியில் கமல் சொல்கிறார். ஆனால், இதெல்லாம் உங்களுக்கு அழகில்லை சார். ஒருவருக்கு ஒரு சிறிய உதவியைச் செய்துவிட்டு அவர் புகைப்படத்தை உலகறியக்காட்டி ஓட்டுக்கேட்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

aanman

பத்து லட்சம் உதவிவிட்டு பெயர் சொல்லாமல் போகிறவர்கள் இருக்குமிடத்தில் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ள ஆன்மன், நான்கு கிராமங்களில் 200 குடும்பங்களின் கந்துவட்டித் துயர் துடைக்க 12 லட்சம் நதி திரட்டுகிறோம். நிதியளித்தவர்களுக்கு கணக்கு வழக்கு புகைப்பட ஆதாரம் தருவோமே தவிர வெளியில் ஒருவர் புகைப்படம் வராது. அப்படித்தான் தனிப்பட்டவர்களுக்கு உதவுகிறோம் இதுவரை. பேரிடர்களில் பொதுவாக நிதி வருவதால், பொதுவில் ஒருசில குழுப் புகைப்படங்களைப் பகிர்வோம். இப்படி தனிப்பட்டவர்களின் படங்களைப்போட்டு ஓட்டுக் கேட்காதீர்கள் கமல் சார். இது தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

help

கடந்த ஆண்டில் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாகிச் சென்று கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மக்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.

aanman

அந்த சமயத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை தன்னார்வலர்கள், தனி மனிதர்கள் என ஏராளமானோர் செய்தனர். மற்றவர்களுக்காக வாழ்கிற சில மனிதர்களை இயற்கை பேரிடர்கள் அடையாளம் காட்டி செல்வது வழக்கம். அப்படி அடையாளம் கட்டிச் சென்ற நம்பிக்கை முகங்களில் எழுத்தாளர் ஆன்மனும் ஒருவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

இதையும் வாசிங்க

வேல்முருகன் கட்சியில் இணைந்த வீரப்பன் மனைவி மற்றும் குருவின் சகோதரி; ஆட்டம் காணும் பா.ம.க!?

2018 TopTamilNews. All rights reserved.