‘நீங்க பேசுன பேச்சுக்கு..’ அனிதா சம்பத்தை கைத்தட்டி பாராட்டும் கமல்ஹாசன்: கடுப்பாகும் சுரேஷ்!

 

‘நீங்க பேசுன பேச்சுக்கு..’ அனிதா சம்பத்தை கைத்தட்டி பாராட்டும் கமல்ஹாசன்: கடுப்பாகும் சுரேஷ்!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான 2ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம் நடைபெற்ற போது அனிதா சம்பத்துக்கும், சுரேஷுக்கும் இடையே நடந்த மோதல் பற்றி அனைவருக்குமே தெரிந்திருக்கும். தன்னை சுமங்கலி என்று சுரேஷ் அழைத்ததை மேற்கோள் காட்டிய அனிதா, ஊருல பல பேரு இப்படி தான் நினைக்கிறாங்க.. ஏன் விதவை பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது? என சரியாகத் தான் பேசினார். ஆனால், ஏற்கனவே அனிதா மீது கோபத்தில் இருந்த சுரேஷ் இதனை பெரிய விஷயமாக மாற்றி விட்டார். இதனை அர்ச்சனாவும் ஆமோதித்தார்.

‘நீங்க பேசுன பேச்சுக்கு..’ அனிதா சம்பத்தை கைத்தட்டி பாராட்டும் கமல்ஹாசன்: கடுப்பாகும் சுரேஷ்!

இருந்தாலும் ஷிவானி, ஆரி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலரும் அனிதா கூறியது சரி தான் என அவருக்கு ஆதரவு அளித்தனர். இந்த நிலையில், அனிதாவை கமல்ஹாசன் கைத்தட்டி பாராட்டுவது போல புரோமோ வெளியாகியுள்ளது. அதில், ‘ விவகாரமாகவே ஆரம்பிக்கலாம் அந்த சுமங்கலி மேட்டர்ல இருந்து என்று கமல்ஹாசன் கூற, அந்த இடத்துல அதை சொல்லி இருக்க வேண்டாம் என அர்ச்சனா கருத்து கூறுகிறார்.

‘நீங்க பேசுன பேச்சுக்கு..’ அனிதா சம்பத்தை கைத்தட்டி பாராட்டும் கமல்ஹாசன்: கடுப்பாகும் சுரேஷ்!

அனிதா அந்த இடத்தில், அந்த விஷயத்தை கூறியது சரி என ஷிவானி அடித்துப் பேசுகிறார். உடனே அனிதா, நான் கூறியது தவறு இல்ல. நான் இதனை மாத்திக்கவும் மாட்டேன். நான் சொன்னது சரி தான் என கமல்ஹாசனிடம் தெரிவிக்கிறார்.

‘நீங்க பேசுன பேச்சுக்கு..’ அனிதா சம்பத்தை கைத்தட்டி பாராட்டும் கமல்ஹாசன்: கடுப்பாகும் சுரேஷ்!

அதற்கு கமல்ஹாசன், நீங்க பேசுன பேச்சுக்கு ஒரு கையால இந்த விஷயத்தை செய்ய முடியாது, இரண்டு கையால் தான் சொல்லணும் எனக்கூறி கைத்தட்டுகிறார். இதனால் அனிதா சம்பத் கையெடுத்து கமல்ஹாசனை கும்பிட, சுரேஷ் சக்கரவர்த்தி கடுப்பாவது போல புரோமோ முடிகிறது.