ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

 

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் களம்காண்கிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தாலும் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. ஆனால் ட்ரம்பின் செல்வாக்கு குறைந்து வருகிறது. தேர்தலில் அவர் வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் அதிபர் ட்ரம்ப், தேர்தலை தள்ளி போடலாமா என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வினவியிருந்தார்.

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரீஸை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ட்ரம்ப், ஜோ பிடன் அமெரிக்கா அதிபராக பதவி ஏற்றால் காவல்துறையை வலுவிழக்க செய்துவிடுவார் என தெரிவித்துள்ளார். கமலா ஹாரீஸ் இந்திய பாரம்பரியத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை விட தனக்கே இந்தியர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என ட்ரம்ப் கூறியுள்ளார். தன்னைவிட கமலா ஹாரிஸ் தான் ஜோ பிடனை அதிகம் கிண்டல் செய்வதை போல உள்ளது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.