பேத்தியுடன் கொஞ்சும் கமலா ஹாரீஸ் – வைரலாகும் வீடியோ

 

பேத்தியுடன் கொஞ்சும் கமலா ஹாரீஸ் – வைரலாகும் வீடியோ

அமெரிக்காவிலிருந்து அதிரடியான செய்திகளே வந்துகொண்டிருந்த நிலையில் அழகான செய்தி வைரலாகி வருகிறது.

இந்திய வம்சாவளி அமெரிக்கர் கமலா ஹாரீஸ். கமலா கடந்த 1990 முதல் அரசியலில் முக்கியப் பணிகளை ஆற்றிவருகிறார். கடந்த அதிபர் தேர்தலில் இவரும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். கலிஃபோர்னியாவின் செனட்டராக தற்போது பதவி வகிக்கிறார்.

பேத்தியுடன் கொஞ்சும் கமலா ஹாரீஸ் – வைரலாகும் வீடியோ

சென்னையை ரொம்பவே விரும்புபவர் கமலா ஹாரீஸ். சென்னை வரும்போதெல்லாம் தாத்தாவோடு சென்னை கடற்கரையில் உலாவியதையும் தமிழ்நாட்டு இட்லியைப் பற்றியும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார் கமலா.

கமலா ஹாரீஸின் பூர்வீக ஊர் மன்னார்குடி என்பதால், அவரின் வெற்றிக்காக இங்கே பூஜைகள் நடத்தப்பட்டன. கமலா ஹாரீஸின் சகோதரி பெயர் மகள் மீனா. அவரி மகளை அதாவது தன் சகோதரியின் பேத்தியை மடியில் வைத்து கமலா ஹாரீஸ் நீண்ட கொஞ்சி விளையாடியிருக்கிறார். அந்த வீடியோவை மீனா தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

கமலா ஹாரீஸிடம் மழலை மொழியில் பேத்தி கொஞ்சி விளையாடும் அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பேத்தியுடன் கொஞ்சும் கமலா ஹாரீஸ் – வைரலாகும் வீடியோ

எப்போது யார் அதிபர் ஆவார் என்ற திகில் நாட்களாகச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் க்யூட் வீடியோவை வைரலாக்கி சற்றே ரிலாக்ஸ் ஆகிறார்கள் அமெரிக்கர்கள்.