மழையில் டான்ஸ் ஆடியபடியே ஓட்டு கேட்ட கமலா ஹாரீஸ் – வைரலாகும் வீடியோ

 

மழையில் டான்ஸ் ஆடியபடியே ஓட்டு கேட்ட கமலா ஹாரீஸ் – வைரலாகும் வீடியோ

இன்னும் இரு வாரங்களே உள்ளது அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

மழையில் டான்ஸ் ஆடியபடியே ஓட்டு கேட்ட கமலா ஹாரீஸ் – வைரலாகும் வீடியோ

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது கொரோனாவை அலட்சியமாகக் கையாண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. அதற்குப் பதில் சொல்லும்போது அமெரிக்காவின் முக்கியமான ஆராய்ச்சியாளரை முட்டாள் எனக் கோபத்தில் திட்டியிருந்தார்.

மழையில் டான்ஸ் ஆடியபடியே ஓட்டு கேட்ட கமலா ஹாரீஸ் – வைரலாகும் வீடியோ

கமலா ஹாரீஸ் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தால், ஓரிரு மாதங்களில் கமலா ஹாரீஸ் ஆட்சியைக் கைப்பற்றி விடுவார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார் ட்ரம்ப். அதனால், முன்பை விடவும் அதிக தீவிரத்துடன் தற்போதைய ஆட்சியின் குறைபாடுகளை மக்களிடம் முன்வைத்து பிரசாரம் செய்துவருகிறார் கமலா ஹாரீஸ்.

நேற்று புளோரிடா மாகாணத்தில் வாக்குகள் சேகரிக்கும் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார் கமலா ஹாரீஸ். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு கையில் குடைப்பிடித்துக்கொண்டே டான்ஸ் ஆடியபடியே ஆதரவாளார்களிடம் பேசினார் கமலா ஹாரீஸ். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் செம வைரலாகி வருகிறது.