அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சவளிப் பெண் இவர்தான்!

அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சவளிப் பெண் இவர்தான்!

உலகின் மாபெரும் வல்லரசு நாடு அமெரிக்கா. அங்கு நடக்கும் தேர்தலை உலகமே உற்றுகவனிக்கும். ஏனெனில், அதன் வெற்றி தோல்வி உலகின் பல நாடுகளின் வணிகத்தைப் பாதிக்கும்.

அமெரிக்காவின அடுத்த தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன. ஆம். அங்கு நவம்பர் மாதம் தேர்தல். அதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றுவருகிறது.

அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சவளிப் பெண் இவர்தான்!

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஆனால், சமீபத்தில் நடந்த கலவரம், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியம் உள்ளிட்ட காரணங்களால் இவருக்கு வெற்றி வாய்ப்பு மங்கலாகவே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகக் களம் இறங்குகிறார் ஜோ பிடன். இவர் தற்போது துணை அதிபராகப் பணியாற்றி வருகிறார்.

அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சவளிப் பெண் இவர்தான்!

இந்நிலையில் ஜோ பிடன், யாரை துணை அதிபராகப் போட்டியிட அறிவிப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்கு உரிய கேள்வியாக இருந்து. ஜோ பிடன் எவரும் எதிர்பாராத வண்ணம் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்திருக்கிறார். ஏனெனில் வேறு வேறு பெயர்கள்தான் பரிசீலனையில் இருந்ததாகச் செய்திகள் வெளியிருந்தன.

கமலா ஹாரீஸ் சென்னையைச் சேர்ந்த பெண் என்பது வியப்புக்கு உரிய செய்தி. இவரின் அம்மா ஷியமளா கோபாலன் இந்தியாவை அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர். அப்பா டொனால்டு ஹாரிஸ், ஜமைக்காவைச் சேர்ந்தவர். கமலாவும் சென்னையில் வளர்ந்திருக்கிறார்.

அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சவளிப் பெண் இவர்தான்!

கமலா கடந்த 20 ஆண்டுகளாகவே அரசியலில் முக்கியப் பணிகளை ஆற்றிவருகிறார். கடந்த அதிபர் தேர்தலில் இவரும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். கலிஃபோர்னியாவின் செனட்டராக தற்போது பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தமுறை கமலா துணை அதிபராவது நிச்சயம் என்பதோடு எதிர்காலத்தில் அமெரிக்காவின் உச்ச பதவியான அதிபராகக்கூட அமர்வார் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.

அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சவளிப் பெண் இவர்தான்!

சென்னையிலிருந்து சென்ற பெண் அமெரிக்காவின் மிகப் பெரிய பொறுப்புக்குப் போட்டியிடுவது பெரிய விஷயம்தான்.