கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது சொந்த ஊரில் போடப்பட்ட கோலங்கள்!

 

கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது சொந்த ஊரில் போடப்பட்ட கோலங்கள்!

கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று அவரது சொந்த ஊரில் வாழ்த்து தெரிவித்து கோலங்கள் போடப்பட்டன.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது சொந்த ஊரில் போடப்பட்ட கோலங்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் தீவிரமாக எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ட்ரம்ப் – பைடன் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்ற ஒரு தெளிவான முடிவு இன்னும் வெளியாகாத நிலையில் குழப்பம் நீடித்து வருகிறது.

இதுவரை வெளியான முடிவுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் பைடன் 264 வாக்குகளையும், குடியரசு கட்சி வேட்பாளரும் அதிபருமான ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதிபர் அரியணையில் அமர 270 வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில் பைடனுக்கு இன்னும் ஆறு வாக்குகளே தேவைப்படுகிறது.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது சொந்த ஊரில் போடப்பட்ட கோலங்கள்!

இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் பூர்வீக ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தில் வீட்டு வாசல்களில் வாழ்த்து தெரிவித்து கோலங்கள் போடப்பட்டன. முன்னதாக அவரது குலதெய்வக் கோயிலான அய்யனார் கோயிலில் கிராம மக்கள் ஒன்று கூடி அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.