’ட்ரம்ப் நிர்வாகம் பெரிய தோல்வி’ கமலா ஹாரீஸ் குற்றச்சாட்டு

 

’ட்ரம்ப் நிர்வாகம் பெரிய தோல்வி’ கமலா ஹாரீஸ் குற்றச்சாட்டு

இன்னும் 18 நாட்களே உள்ளன அமெரிக்கத் தேர்தலுக்கு. அதனால், தேர்தல் பிரசாரம் இரு தரப்பில் அனல் பறக்க நடைபெற்று வருகிறது.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

’ட்ரம்ப் நிர்வாகம் பெரிய தோல்வி’ கமலா ஹாரீஸ் குற்றச்சாட்டு

ட்ரம்பை நோக்கி வீசப்படும் குற்றசாட்டுகளில் முதன்மையானது கொரோனா நோய்த் தொற்று பரவலை முறையாகக் கட்டுப்படுத்தவும் கையாளவும் தவறிவிட்டார் என்பதே. அதை சரிசெய்வதற்காக, நவம்பருக்குள் கொரோனா தடுப்பூசி வந்துவிடும் என்றெல்லாம் கூறி வந்தார் ட்ரம்ப். ஆனால், அவருக்கே கொரோனா தொற்று வந்தது சோகம். ஆயினும், முழுமையாக சிகிச்சை முடியாமலேயே தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார் என்று விமர்சனம் எழுந்து வருகிறது.

’ட்ரம்ப் நிர்வாகம் பெரிய தோல்வி’ கமலா ஹாரீஸ் குற்றச்சாட்டு

இந்நிலையில் பிரசாரம் மேற்கொண்ட துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ், ‘இதுவரை அமெரிக்காவில் இருந்த அதிபர்கள் வரலாற்றிலேயே மோசமான நிர்வாகம் கொண்டது ட்ரம்ப் ஆட்சியில்தான்’ என்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும், கொரோனா குறித்த உண்மைகளை நாட்டுமக்களிடம் முறையாகத் தெரிவிக்கவில்லை. அதனால்தான் அவர்களால் தங்களைத் தற்காத்துக்கொள்ள வில்லை என்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 81,50,383. குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 52,79,651. சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 2,21,850 பேர்.