“அம்மாவின் கனவை நிறைவேற்றுவேன்” -அமெரிக்காவில் அம்மா மீது சபதமெடுத்த இன்னொரு மன்னார்குடி பெண் கமலா ஹாரிஸ்.

 

“அம்மாவின் கனவை நிறைவேற்றுவேன்” -அமெரிக்காவில் அம்மா மீது சபதமெடுத்த இன்னொரு மன்னார்குடி பெண் கமலா ஹாரிஸ்.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலாஹாரிஸ் கடந்த புதனன்று பொறுப்பேற்றுக்கொண்டார் . அந்த கட்சியின் வேட்பாளராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டதும் அவர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை கடுமையாக தாக்கினார் .

“அம்மாவின் கனவை நிறைவேற்றுவேன்” -அமெரிக்காவில் அம்மா மீது சபதமெடுத்த இன்னொரு மன்னார்குடி பெண் கமலா ஹாரிஸ்.


அவர் தன்னுடைய தாயார், தன்னையும் தன்னுடைய சகோதரியையும் மிக தைரியமாக வளர்த்தாரென்றும் ,அதனால் அவர் தன்னை மிகப்பெரிய பதவியில் அமரவைத்து அழகு பார்க்க விரும்பினாரென்றும் ,அதனால் அவரின் கனவை நான் நிறைவேற்றுவேன் என்றும் அவர் சபதம் எடுத்தார் .
மேலும் அவர் இதற்கு முன்பிருந்த கருப்பின விடுதலைக்கு போராடிய தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் .அமெரிக்காவில் முதன் முதலாக ஒரு ஆப்பிரிக்க இந்திய பெண் இந்த துணை ஜனாதிபதி பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது தனக்கு பெருமையளிப்பதாக கூறினார் .மேலும் ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவில் நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும் ,ஊழல் பெருகி விட்டதாகவும் அதனால் குடியரசு கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி விட்டு ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார் .தனக்கு இந்தியர்கள் மற்றும் கறுப்பினத்தவர்களின் ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறிய அவ,ர் இத்தேர்தலில் தான் நிச்சயம் வெல்வது உறுதி என்று கூறினார் .மேலும் அவர் தன்னுடைய பூர்வீக தமிழக உறவினர்களை நினைவுகூர்ந்தார் .

“அம்மாவின் கனவை நிறைவேற்றுவேன்” -அமெரிக்காவில் அம்மா மீது சபதமெடுத்த இன்னொரு மன்னார்குடி பெண் கமலா ஹாரிஸ்.