2021 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூரில் கமல் போட்டி?

 

2021 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூரில் கமல் போட்டி?

2021 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சி முதன்முதலாக அரசியல் களம் கண்டது. தற்போது 2021 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு களமிறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் பிரச்சாரத்திற்கு தயாராகியுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூரில் கமல் போட்டி?

கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள், மண்டல மற்றும் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 100 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் கமல் ஹாசன், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லைதிட்டவட்டமாக கூறியுள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூரில் கமல் போட்டி?

இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மக்கள் நீதி மய்யத்திற்கு அதிக செல்வாக்கு இருப்பதாக தனியார் நிறுவன சர்வே தகவல் தெரிவித்துள்ள நிலையில் கமல் ஹாசன் மயிலை தொகுதியில் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.