“காப்பி அடிக்கிறார்கள்… அடிச்சி துரத்தனும்” – சூடான கமல்

 

“காப்பி அடிக்கிறார்கள்… அடிச்சி துரத்தனும்” – சூடான கமல்

திருச்சி சிறுகனூரில் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திமுக பிரம்மாண்ட மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மு.க. ஸ்டாலின், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். இந்த வாக்குறுதியே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை நாங்கள் தான் முதலில் அறிவித்தோம் என மக்கள் நீதி மய்யம் சொந்தம் கொண்டாடுகிறது. இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவோம் என நாங்கள் அறிவித்தோம்; திமுக தங்களைப் பார்த்து காப்பி அடித்து வாக்குறுதி கொடுப்பதாக அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா விமர்சித்திருந்தார். தற்போது இக்கருத்தை அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் வழிமொழிந்திருக்கிறார்.

“காப்பி அடிக்கிறார்கள்… அடிச்சி துரத்தனும்” – சூடான கமல்

சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பெண்களின் நலன் குறித்த நிறைய திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதை அறிவித்தாலும் காப்பி அடிப்பார்கள். புலியை அடித்து துரத்திய வரலாறு கொண்ட பெண்கள், வாக்குக்குப் பணம் கொடுப்போரையும் அடித்து துரத்த வேண்டும்” என்றார்.